வீட்டிலேயே சுவையான தக்காளி சாஸ் ரெசிப்பி!!
 
தக்காளி சாஸினை நாம் பொதுவாக கடைகளில்தான் வாங்கிச் சாப்பிடுவோம், ஆனால் அதில் அதிக அளவு கெமிக்கல் இருப்பதால் நாம் வீட்டிலேயே செய்து பயன்படுத்துவதுதான் சிறந்தது.

தேவையானவை :
தக்காளி - ஒரு கிலோ
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
சர்க்கரை – 3 ஸ்பூன்
உப்பு – 1 பிஞ்ச்
இஞ்சி – 1/2 துண்டு
பூண்டு - 3 பல்
பட்டை - 2
கிராம்பு - 2
எலுமிச்சைப்பழச் சாறு – 3  ஸ்பூன்.

செய்முறை :
1. தக்காளியை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும். அடுத்து பூண்டு, இஞ்சியைத் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து குக்கரில் தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வரை விட்டு வேக விட்டு இறக்கி நன்கு மசித்து விடவும்.
3. அடுத்து அரைத்த பேஸ்ட்டினை நன்கு வடிகட்டி, ஒரு பாத்திரத்னை அடுப்பில் வைத்து நன்கு கிளறவும்.  சாஸ் பதம் வந்ததும், எலுமிச்சைப்பழச் சாறு சேர்த்து இறக்கினால் தக்காளி சாஸ் ரெடி.

From around the web