சுவையான சேப்பங்கிழங்கு புளிக் குழம்பு ரெசிப்பி!!
 

நாம் மற்ற காய்களில் வைப்பதுபோல் சேப்பங்கிழங்கில் புளிக் குழம்பு வைத்து சாப்பிட்டால் ரொம்பவும் ருசியாக இருக்கும்.

 

தேவையானவை :
சேப்பங் கிழங்கு   - 1/2 கிலோ
வெந்தயம்  - 1\4 ஸ்பூன்
சின்னவெங்காயம் - 10
தக்காளி - 2
கறிவேப்பிலை  - சிறிதளவு
மஞ்சள் தூள்  - கால் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் – 1 ஸ்பூன்
பூண்டு - 1
புளி – எலுமிச்சை அளவு
எண்ணெய்   - தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு

செய்முறை :
1. சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பூண்டினை தோல் உரித்துக் கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றி  வெந்தயம் போட்டு தாளித்து சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, தக்காளி போட்டு வதக்கவும்.
3. அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, 
சேப்பங் கிழங்கு சேர்த்து வேக விடவும்.
4. அடுத்து புளியை நீரில் கரைத்து கொதிக்கவிட்டு எண்ணெய் பிரியும்போது இறக்கினால் சேப்பங் கிழங்கு புளிக்குழம்பு ரெடி.

From around the web