சுவை நிறைந்த சேனைக்கிழங்கு மசியல்!
 

சேனைக் கிழங்கில் நாம் இப்போது மிகவும் சுவையான மசியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சுவை நிறைந்த சேனைக்கிழங்கு மசியல்!

தேவையானவை:
சேனைக்கிழங்கு - 3
பச்சை மிளகாய் - 3
எலுமிச்சை – ½
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
கடுகு - 1/4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
உளுந்து - 1/4 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை:
1. சேனைக்கிழங்கின் தோலைச் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து குக்கரில் சேனைக் கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைய வேக விடவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
3. அடுத்து பெருங்காயம், வேகவைத்த சேனைக்கிழங்கு சேர்த்துக் கிளறி வேகவிட்டு எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கினால் சேனைக்கிழங்கு மசியல் ரெடி.

From around the web