சுவையான அன்னாசி மில்க் ஷேக்!!
 
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையிலான மில்க்ஷேக் ரெசிப்பியை அன்னாசிப் பழத்தைக் கொண்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையிலான மில்க்ஷேக் ரெசிப்பியை அன்னாசிப் பழத்தைக் கொண்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
அன்னாசிப் பழம்- 1
பால்- 1 டம்ளர்
சர்க்கரை- 4 ஸ்பூன்
ஐஸ் கட்டிகள்- 2
தேன்- 2 ஸ்பூன்
பாதாம்- 5

செய்முறை:
1.    அன்னாசிப் பழத்தின் தோலினை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அடுத்து சர்க்கரையினை பொடித்துக் கொள்ளவும்.
2.    பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சி ஆறவிடவும். அடுத்து  பாலை ஊற்றி, தேன் மற்றும் பாதாம் சேர்க்கவும்.
3.    இறுதியில் இதில் ஐஸ்கட்டி சேர்த்துக் கலந்து குடித்தால் அன்னாசி மில்க் ஷேக் ரெடி.
 
From around the web