தித்திப்பான பாசிப்பருப்பு லட்டு ரெசிப்பி!!
 

பாசிப்பருப்பினை சாம்பாராகவோ அல்லது கூட்டாகவோ சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு இதுபோன்று பாசிப்பருப்பில் லட்டு செய்து கொடுக்கலாம்.

 

பாசிப்பருப்பினை சாம்பாராகவோ அல்லது கூட்டாகவோ சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு இதுபோன்று பாசிப்பருப்பில் லட்டு செய்து கொடுக்கலாம்.

தேவையானவை:
பாசிப் பருப்பு – 200 கிராம்
சர்க்கரை – 200 கிராம்
நெய் - 100 கிராம்
ஏலக்காய் - 4
முந்திரிப் பருப்பு -10

செய்முறை :
1.    வாணலியில் பாசிப்பருப்பை போட்டு வறுத்து ஆறவிட்டு மிக்சியில் போட்டு பொடித்து அதனை நன்கு சலித்துக் கொள்ளவும். அதேபோல் சர்க்கரையினைப் போட்டு மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் நெய்விட்டு ஏலக்காய் மற்றும் முந்திரிப் பருப்பை போட்டு வறுத்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
3.    இறுதியில் பாசிப்பருப்பு கலவை, முந்திரிக் கலவை, பின்னர் அவற்றை பாசிப் பருப்பு மாவுடன் சேர்த்து கிளறி நெய் ஊற்றி லட்டுகளாகப் பிடித்தால் பாசிப்பருப்பு லட்டு ரெடி.

From around the web