சுவை நிறைந்த காளான் கிரேவி!!
 

காளானில் இப்போது நாம் இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிடும் வகையிலான கிரேவி ரெசிப்பியினை இப்போது செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
 
 

காளானில் இப்போது நாம் இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிடும் வகையிலான கிரேவி ரெசிப்பியினை இப்போது செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

காளான் – அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய்- 3
மிளகாய்த் தூள் - 1/4 ஸ்பூன்
தனியாத் தூள் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
பட்டை- 3
கிராம்பு - 2
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை- தேவையான அளவு, 
கொத்தமல்லி இலை- தேவையான அளவு

செய்முறை :

1. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். காளானை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நன்கு வதக்கிக் கொள்ளவும். அடுத்து இதனை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்து அரைத்த கலவையைப் போட்டு வதக்கவும்.
3. அடுத்து காளானைப் போட்டு வதக்கி மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
5. இறுதியில் எண்ணெய் பிரிந்துவரும்போது கொத்துமல்லி இலை தூவி இறக்கினால் காளான் குழம்பு ரெடி.


 

From around the web