நாவில் எச்சில் ஊறவைக்கும் காளான் கிரேவி!!

காளானில் பிரியாணி, ப்ரை, குழம்பு என நாம் பல வகையான ரெசிப்பிகளை செய்வது எப்படி என்று பார்த்திருக்கிறோம், அந்தவகையில் இப்போது நாம் காளானில் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

காளானில் பிரியாணி, ப்ரை, குழம்பு என நாம் பல வகையான ரெசிப்பிகளை செய்வது எப்படி என்று பார்த்திருக்கிறோம், அந்தவகையில் இப்போது நாம் காளானில் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

காளான் – 1/4 கிலோ

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 1

தக்காளி - 2

பட்டை - 1

துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் - 1

கிராம்பு - 2

சீரகம் - 1 டீஸ்பூன்

சோம்பு - 2 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

மஞ்சள் தூள் - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1. காளானை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவிக் கொள்ளவும்.

2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,

தக்காளி, பட்டை, துருவிய தேங்காய், ஏலக்காய், கிராம்பு, சீரகம், சோம்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

3. அடுத்து வதக்கிய பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு பேஸ்ட், காளான் சேர்த்து வதக்கவும்.

4. அடுத்து அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

5. அடுத்து இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் காளான் கிரேவி ரெடி.

From around the web