சுவையான மஸ்ரூம் சில்லி ரெசிப்பி!!
 

மஸ்ரூமில் பிரியாணி, ஃப்ரை, கிரேவி எனப் பல ரெசிப்பிகள் செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் சுவையான மஸ்ரூம் சில்லி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

மஸ்ரூமில் பிரியாணி, ஃப்ரை, கிரேவி எனப் பல ரெசிப்பிகள் செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் சுவையான மஸ்ரூம் சில்லி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
காளான் - அரை கிலோ
வெங்காயம்-1
பச்சை மிளகாய் - 5
குடைமிளகாய் - 1
வெங்காயத்தாள் - கைப்பிடியளவு
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 4 ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
தக்காளி சாஸ்- 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை :
1.    காளானை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், வெங்காயத் தாளினை நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் போட்டு நன்கு வதக்கி இஞ்சி- பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
3.    அடுத்து ஒரு பாத்திரத்தில் கார்ன் ஃப்ளார் மாவு, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து இதனை எண்ணெயில் பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
4.    அடுத்து வதக்கிய கலவையுடன் தக்காளி சாஸ் ஊற்றி, பொரித்த காளானைப் போட்டு வதக்கி
வெங்காயத் தாளை தூவி இறக்கினால் மஸ்ரூம் சில்லி ரெடி.

From around the web