சுவையான ஆட்டு மூளை வறுவல்!!
 

அசைவ உணவுப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த வகையிலான ஒரு சிறப்பான ரெசிப்பியினைப் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் இப்போது ஆட்டு மூளை வறுவலை இப்போது பார்க்கலாம்.
 
 


அசைவ உணவுப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த வகையிலான ஒரு சிறப்பான ரெசிப்பியினைப் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் இப்போது ஆட்டு மூளை வறுவலை இப்போது பார்க்கலாம்.

தேவையானவை:
ஆட்டு மூளை – 2
வெங்காயம் - 10 
தக்காளி - 2 
பட்டை - 2 
கிராம்பு - 3 
இஞ்சி – 1
பூண்டு – 2
பச்சை மிளகாய் - 2 
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் 
மல்லித்தூள் -1 டீஸ்பூன் 
மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன் 
கொத்தமல்லித்தழை- கைப்பிடியளவு
நல்லெண்ணெய்- சிறிதளவு 
உப்பு- சிறிதளவு

செய்முறை: 
1.    வாணலியில் எண்ணெய் ஊற்றி  பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்கவும்.
2.    அடுத்து பூண்டு- இஞ்சி சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
3.    அடுத்து  பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி—பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
4.    அடுத்து மிளகாய்த்தூள், மல்லித்தூள், மிளகுத் தூள், உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
5.    அடுத்து மூளை சேர்த்துக் கிளறி கொத்தமல்லித் தழை இறக்கினால் ஆட்டு மூளை வறுவல் ரெடி.
 

From around the web