சுவையான கருணைக் கிழங்கு மசியல்!!

உடல் எடையைக் குறைக்க நினைப்போர் கருணைக்கிழங்கினை தினசரிக்கு எடுத்துக் கொள்ளுதல் வேண்டும், அந்த கருணைக் கிழங்கில் மசியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

உடல் எடையைக் குறைக்க நினைப்போர் கருணைக்கிழங்கினை தினசரிக்கு எடுத்துக் கொள்ளுதல் வேண்டும், அந்த கருணைக் கிழங்கில் மசியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை

 • கருணைக் கிழங்கு – கால் கிலோ
 • புளி – சிறிதளவு
 • பச்சை மிளகாய் - 5
 • வெங்காயம் - 50 கிராம்
 • மஞ்சள் தூள் - சிறிதளவு
 • பெருங்காயத்தூள்- தேவையான அளவு,
 • உப்பு- தேவையான அளவு,
 • எண்ணெய் - தேவையான அளவு
 • கடுகு - தேவையான அளவு
 • கறிவேப்பிலை - தேவையான அளவு,
 • வெல்லம் – சிறிதளவு

செய்முறை:

 1. 1. கருணைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசிக்கவும்.
 2. 2. அடுத்து புளியுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கரைக்கவும்.
 3. 3. அடுத்து பச்சை மிளகாய், வெங்காயத்தை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். 
 4. 4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, புளித் தண்ணீர் சேர்க்கவும்.
 5. 5. அடுத்து மசித்த கிழங்கைப் போட்டு வெல்லம் போட்டுக் கிளறி இறக்கினால் கருணைக் கிழங்கு மசியல் ரெடி.

From around the web