சுவையான சிக்கன் சூப் ரெசிப்பி
 

சிக்கன் அதிக அளவு புரதச் சத்தினைக் கொண்டதாக உள்ளது. புரதத்தினை நாம் அதிக அளவில் பெற வேண்டுமெனில் நாம் சிக்கனை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 
சுவையான சிக்கன் சூப் ரெசிப்பி

சிக்கன் அதிக அளவு புரதச் சத்தினைக் கொண்டதாக உள்ளது. புரதத்தினை நாம் அதிக அளவில் பெற வேண்டுமெனில் நாம் சிக்கனை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேவையானவை:
சிக்கன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 50 கிராம்
சீரகத்தூள் – 1 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 1
இஞ்சி –  பூண்டு பேஸ்ட்– 2 ஸ்பூன்
பட்டை- 1 துண்டு,
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
தனியாத்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 /2 ஸ்பூன்
பச்சை மிளகாய்- 2
உப்பு- தேவையான அளவு, 
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – தேவையான அளவு

செய்முறை : 
1.    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து.தக்காளி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டையினைப் போட்டு தாளிக்கவும். அடுத்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை வதக்கி இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
3.    அடுத்து மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், உப்பு, சிக்கன் சேர்த்து 4 விசில் விட்டு இறக்கவும்.
4.    அடுத்து இந்த சூப்பில் கொத்தமல்லி தழை, எலுமிச்சைசாறு சேர்த்துப் பிழிந்து இறக்கினால் சிக்கன் சூப் ரெடி.

From around the web