சுவையான சிக்கன் நூடுல்ஸ் ரெசிப்பி!!
 

சிக்கனில் நாம் இப்போது நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. 

 
சுவையான சிக்கன் நூடுல்ஸ் ரெசிப்பி!!

தேவையானவை :
சிக்கன் – ½ கிலோ
நூடுல்ஸ் - 1 பாக்கெட்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
குடை மிளகாய்-1
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 ஸ்பூன்
வெங்காயத் தாள் - தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் சிக்கனைப் போட்டு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
2. அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் மற்றும் வெங்காயத்தாளை நறுக்கிக் கொள்ளவும்.
3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் சேர்த்து வதக்கி சிக்கன் மற்றும் நூடுல்ஸ் சேர்த்து வதக்கவும்.
4. அதன்பின்னர் சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு, வெங்காயத் தாள் சேர்த்து வேகவிட்டு இறக்கினால் சிக்கன் நூடுல்ஸ் ரெடி.
 

From around the web