சுவையான சிக்கன் பிரியாணி செய்யலாம் வாங்க 
 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையிலான சிக்கன் பிரியாணி ரெசிப்பியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையிலான சிக்கன் பிரியாணி ரெசிப்பியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ
சிக்கன் – 1/2 கிலோ 
நெய் - 150 மில்லி அளவு 
வெங்காயம் - 4 
தக்காளி - 3
இஞ்சி- 1 துண்டு
பூண்டு- 1 
பட்டை- 4
பிரியாணி இலை - 5 
கிராம்பு- 5,
ஏலக்காய் - 5 
மிளகாய்த் தூள் - 11/2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
மல்லித் தூள் - 1 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் - 5 
தயிர் – 1 டம்ளர் 
எலுமிச்சை பழம் - 1 
கொத்தமல்லி தழை- கைப்பிடியளவு 
புதினா - கைப்பிடியளவு
எண்ணெய் – தேவையான அளவு 

செய்முறை:
1.    வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டினை மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் போட்டு தாளித்து அத்துடன் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு போட்டு வதங்க்கவும்.
3.    அடுத்து கொத்தமல்லி, புதினா இலை, பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் போட்டு வதக்கவும்.
4.    அடுத்து சிக்கன், உப்பு, தயிர் சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வேகவிட்டு, அரிசியைப் போட்டு அதனைவிட இரண்டு மடங்கு தண்ணீர்விட்டு வேக விடவும். 
5.    அடுத்து விசில் வரும்போது எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு இறக்கினால் சிக்கன் பிரியாணி ரெடி.
 

From around the web