சுவையான கத்தரிக்காய் பொரியல் ரெசிப்பி!!

கத்தரிக்காயில் இப்போது நாம் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இது ரசம் சாதத்திற்கு வைத்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

 
சுவையான கத்தரிக்காய் பொரியல் ரெசிப்பி!!

கத்தரிக்காயில் இப்போது நாம் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இது ரசம் சாதத்திற்கு வைத்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையானவை:
கத்தரிக்காய் - 8
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
தேங்காய் – கால் மூடி
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
உளுந்து - 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள்- 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை :
1.    கத்திரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.  தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
3.    அடுத்து கத்தரிக்காயினைப் போட்டு வதக்கி தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும்.
4.    அடுத்து உப்பு சேர்த்துக் கலந்து மிளகாய்த் தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து வேகவிட்டு இறக்கினால் கத்தரிக்காய் பொரியல் ரெடி. 


 

From around the web