குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடும் பாகற்காய் பிரட்டல்!!
 

பாகற்காய் என்றாலே குழந்தைகள் ஓடிவிடுவர், ஆனால் இப்போது நாம் கசக்காத வகையிலான பாகற்காய் பிரட்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

தேவையானவை:
பாகற்காய் - 3
தக்காளி - 2
வெங்காயம் - 2
கடுகு- ½ ஸ்பூன்
உளுந்து- ½ ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 4
தயிர்- கால் கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 
1.    பாகற்காயை மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து ஒரு பாத்திரத்தில் தயிரினை ஊற்றி பாகற்காயினை அரை மணி நேரம் ஊறவைத்து அலசிப் பயன்படுத்தவும்.
3.    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்
4.    அடுத்து பாகற்காய், உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு இறக்கினால் பாகற்காய் பிரட்டல் ரெடி.

From around the web