வீட்டிலேயே கறி மசாலா பொடி!!
 

கறி மசாலா பொடியினை வீட்டிலேயே செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

 

தேவையானவை:
சீரகம் – 2 ஸ்பூன்
மிளகு – 2 ஸ்பூன்
பெருஞ்சீரகம் – 2 ஸ்பூன்
மஞ்சள்– 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 10
கசகசா – 1 ஸ்பூன்
ஏலக்காய் -5
கிராம்பு – 5
இலவங்கம் – 1 துண்டு

செய்முறை :
1. வாணலியில் சீரகம், மிளகு, பெருஞ்சீரகம், மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய், கசகசா, ஏலக்காய், கிராம்பு, இலவங்கம், மஞ்சள் போன்ற அனைத்தையும் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
2. அடுத்து மிக்சியில் போட்டு அரைத்தால் கறி மசால் பொடி ரெடி.
இந்த கறி மசால் பொடியினை டப்பாவில் அடைத்துவைத்துப் பயன்படுத்தவும்.

From around the web