மொறுமொறு சேப்பங்கிழங்கு ஃப்ரை ரெசிப்பி!!
 

சேப்பங்கிழங்கில் நாம் பொதுவாக வறுவல்தான் செய்வோம். ஆனால் இப்போது ரொம்பவும் டேஸ்ட்டியான சேப்பங்கிழங்கு ஃப்ரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

தேவையானவை:
சேப்பங்கிழங்கு – 500 கிராம்
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
இஞ்சி- சிறு துண்டு
பூண்டு- 7 பல்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: 
1.    சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டினை அரைத்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், இஞ்சி- பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து கலந்து பிரிட்ஜில் 20 நிமிடங்கள் ஊறவிடவும்.
3.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சேப்பங்கிழங்கினைப் போட்டு பொரித்து எடுத்தால் சேப்பங்கிழங்கு ப்ரை ரெடி. 
 

From around the web