மொறுமொறு பாகற்காய் வறுவல்!!
 

குழந்தைகளுக்கு உடலில் பூச்சித் தொல்லைகள் இருப்பின் பாகற்காயினைக் கொடுத்து வருதல் வேண்டும். இந்த பாகற்காயில் இப்போது வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

தேவையானவை:
பாகற்காய் - அரை கிலோ
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
 
செய்முறை:
1.    பாகற்காயில் உள்ள விதைகளை நீக்கி வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து ஒரு பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து பாகற்காய் போட்டு தண்ணீர் தெளித்து நன்கு குலுக்கி பிரிட்ஜில் ஊறவைக்கவும்.
3.    அதன்பின்னர் 30 நிமிடங்கள் கழித்து பாகற்காயினை எண்ணெயில் பொரித்து எடுத்தால் மொறுமொறு பாகற்காய் வறுவல் ரெடி. 
 

From around the web