தித்திப்பான ஆப்பிள் அல்வா ரெசிப்பி!!
 

ஆப்பிளை அப்படியே பழமாக சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆப்பிள் அல்வா ரெசிப்பியை செய்து கொடுக்கலாம்.

 

ஆப்பிளை அப்படியே பழமாக சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆப்பிள் அல்வா ரெசிப்பியை செய்து கொடுக்கலாம்.

தேவையானவை :
ஆப்பிள் - 3
பால் – கால் லிட்டர்
நெய் – 200 மில்லி லிட்டர்
சர்க்கரை – அரை கிலோ
முந்திரி - 10
பாதாம் - 10
ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்
கேசரி பவுடர் – தேவையான அளவு

செய்முறை :

1.  ஆப்பிளின் தோலை சீவி, மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும். கோதுமையை தண்ணீர்விட்டு கரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து வாணலியில் பாலை ஊற்றி அதில் ஆப்பிள் மற்றும் கேசரிப் பவுடர் போட்டு 10 நிமிடங்கள் வேகவிடவும்.
3. அடுத்து அதனுடன் சர்க்கரை, கோதுமை மாவுக் கரைசல், நெய் சேர்த்து நெய் பிரியும் வரை வேகவிட்டு இறக்கவும்
4. அடுத்து முந்திரி, ஏலக்காய் தூள், பாதாம் சேர்த்து கிளறி இறக்கினால் ஆப்பிள் அல்வா ரெடி.
 

From around the web