வெயிலுக்கு இதமான சுவையான பப்பாளி ஜூஸ்

பப்பாளியில் ஏகப்பட்ட சத்துகள் இருக்கின்றது. பப்பாளி பழத்தினை அடிக்கடி உணவில் எடுத்துக்கொண்டால் கண்பார்வை தெளிவாகும். சருமம் மினுமினுப்பு கூடும். தேவையான பொருள்கள் : பப்பாளி பழம் – 1ஐஸ் கட்டிகள் – தேவையான அளவுசர்க்கரை – தேவையான அளவுசெய்முறை : முதலில் பப்பாளி பழத்தை தோல் உரித்து கொட்டைகளை அகற்றி சிறு
 

பப்பாளியில் ஏகப்பட்ட சத்துகள் இருக்கின்றது. பப்பாளி பழத்தினை அடிக்கடி உணவில் எடுத்துக்கொண்டால் கண்பார்வை தெளிவாகும். சருமம் மினுமினுப்பு கூடும்.

தேவையான பொருள்கள் :

பப்பாளி பழம்         –     1
ஐஸ் கட்டிகள்          –     தேவையான அளவு
சர்க்கரை                 –      தேவையான அளவு
செய்முறை : 

முதலில் பப்பாளி பழத்தை தோல் உரித்து கொட்டைகளை அகற்றி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில்​  துண்டுகளோடு சர்க்கரை சேர்த்து அரைத்து அதனுடன் ஐஸ் கட்டிகள் சேர்த்தால் சுவையான பப்பாளி ஜூஸ் தயார்.

சுவைக்கு எலுமிச்சை பழச்சாறு சேர்க்கலாம். இஞ்சி சேர்த்துக்கொள்ளலாம். பப்பாளி துண்டுகளோடு ஆரஞ்ச் பழச்சாறினையும்கூட சேர்க்கலாம்..

From around the web