கருப்பட்டியில் உள்ள சத்துகள் இவைகள்தான்!!

கருப்பட்டியானது மிகவும் சிறந்த இயற்கையான உணவாகும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் பலரும் கூறுவதுண்டு. ஆனால் மருத்துவர்கள் எப்போதும் கருப்பட்டியினை எடுத்துக் கொள்ளுதல் கூடாது என்று கூறியது கிடையாது.

காரணம் கருப்பட்டி எவ்வித பக்க விளைவுகளையும் கொண்டிராமல்,  மிகச் சிறந்த பலன்களைக் கொடுக்கும் என்பதால்தான். இத்தகைய கருப்பட்டியின் மருத்துவ குணங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

கருப்பட்டியானது ரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது, மேலும் செரிமானப் பிரச்சினைகளான வாயுத் தொல்லை, வயிறு உப்புசம், பசியின்மை, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த தீர்வினைக் கொடுக்கும் என்று தெரிகிறது.

மேலும் நீண்ட நாள் சளித்தொல்லை கொண்டவர்கள், வறட்டு இருமல், தும்மல் போன்ற பிரச்சினைகளுக்கு கருப்பட்டி மிகச் சிறந்த தீர்வாக உள்ளது. பெண்களுக்கு 40 வயது அதிகம் ஆகும்பட்சத்தில், எலும்புத் தேய்மானம் நிச்சயம் வரும், அப்போது நாம் கருப்பட்டியினை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் எலும்புத் தேய்மானம் ஏற்படுவது குறையும்.

மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றது.

From around the web