சிவப்பு அரிசியின் மருத்துவ குணங்கள் இவைகள்தான்!!

சிவப்பு அரிசியானது சாதாரண அரிசியினைவிட விலை அதிகமானதாக உள்ளது. இதில் புட்டு, சாதம், கஞ்சி, களி எனப் பலரும் பல வகையான ரெசிப்பிகளை செய்து சாப்பிடுவதுண்டு. இதன் விலை அதிகமாக இருந்தாலும் இதனை அனைவரும் வாங்கக் காரணம் இதில் உள்ள சத்துகள் காரணமாகத்தான்.
 
சாதாரண வெள்ளை அரிசியில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது, அதனால்தான் அதனை சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது என்று கூறப்படுகின்றது, ஆனால் இதுவே சிவப்பு அரிசியினை எடுத்துக் கொண்டால் சர்க்கரை அளவானது கட்டுக்குள் வரும்.
 
மேலும் சிவப்பு அரிசியில் அதிக அளவில் நார்ச் சத்துக்கள் இருப்பதால் உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் சிவப்பு அரிசியினை எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் ஆனது குறையும்.

மேலும் இது புற்றுநோய்க் கிருமிகளுக்கு எதிராகப் போராடும் தன்மை கொண்டதாக உள்ளது. மேலும் இது எலும்புகளை வலுவாக்குவதில் முக்கிய பங்காற்ற உள்ளது. மேலும் இது தசைகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றது.

மேலும் சிவப்பு அரிசி தலைமுடி வளர்ச்சியினை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது.
 
மேலும் சிவப்பு அரிசியானது சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரி செய்கிறது. மேலும் இது கல்லீரல் இயக்கத்தினைச் சரிசெய்யும் தன்மை கொண்டதாக உள்ளது.
 
From around the web