வெண்டைக்காயின் நன்மைகள் இவைகள்தான்!!
 

வெண்டைக்காய் வழவழப்பாக பிசின்போல் இருக்கும் என்பதால் பலரும் அதனை விரும்பிச் சாப்பிடுவதில்லை, ஆனால் அதன் மருத்துவ குணங்களோ அளப்பரியதாக உள்ளது. அத்தகைய மருத்துவ குணங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
 
 

வெண்டைக்காய் வழவழப்பாக பிசின்போல் இருக்கும் என்பதால் பலரும் அதனை விரும்பிச் சாப்பிடுவதில்லை, ஆனால் அதன் மருத்துவ குணங்களோ அளப்பரியதாக உள்ளது. அத்தகைய மருத்துவ குணங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

வெண்டைக்காயில் அதிக அளவு நார்ச் சத்து உள்ளதால் அது உடல் எடையினை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள உதவுகின்றது, மேலும் வெண்டைக்காயானது எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத காய் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம்.

வெண்டைக்காயானது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றது. இதனால் சர்க்கரை நோயாளிகள் தயங்காமல் வெண்டைக்காயினை எடுத்துக் கொள்ளலாம்.
 
மேலும் வெண்டைக்காய் செரிமானப் பிரச்சினைகளான வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகின்றது. மேலும் வெண்டைக்காய் எலும்புகள் மற்றும் பற்களினை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றது.

வெண்டைக்காய் ஞாபக சக்தியினை அதிகரிக்கும் என்பதால் குழந்தைகளுக்கு கட்டாயம் வாரத்தில் 2முறை என்ற அளவில் கட்டாயம் செய்து கொடுத்தல் வேண்டும், 50 வயதினை நெருங்கியவர்களும் மறதியால் அதிக அளவில் அவதிப்பட்டால் கட்டாயம் வெண்டைக்காயினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

மேலும் அறிவியல் ஆய்வாளர்கள் வெண்டைக்காய் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதாக உள்ளது.

From around the web