சீரகத்தின் நன்மைகள் இவைகள்தான்!!

சீரகம் அனைவர் வீட்டிலும் இருக்கும் ஒரு பொருளாகும், அந்த சீரகத்தின் நன்மைகள் குறித்து நாம் இப்போது பார்க்கலாம். சீரகமானது உடல் எடையினைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதாவது காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீரைக் குடித்து வருதல் வேண்டும்.
 
மேலும் செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் சீரகத் தண்ணீரைக் குடித்தால் வயிறு வலி, வயிற்றுப் போக்கு, மலச் சிக்கல், வாயுத் தொல்லை போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக உள்ளது.

மேலும் சீரகத் தண்ணீரை கர்ப்பிணிப் பெண்கள் குடித்து வந்தால் சுகப் பிரசவம் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருக்கும். 6 மாதக் குழந்தைகள் முதல் அனைவருக்கும் வயிற்று வலி ஏற்பட்டால் சீரகத் தண்ணீரை வயதிற்கேற்ப கொடுத்துவரலாம்.

சுகப் பிரசவம் நிகழ்ந்த பின்னரும் பாலூட்டு தாய்மார்கள் சீரகத்தினை அதிக அளவு எடுத்துக் கொண்டால் பால் அதிகம் சுரக்கும், மேலும் ஆஸ்துமா, சளி, இருமல் பிரச்சினை உள்ளவர்கள் சீரகத்தில் டீப் போட்டு குடிக்கலாம்.

பித்தம், கபம் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் சீரகத்தினை சாதத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும். தினமும் காலையில் சீரக டீ குடித்து வந்தால் உடல் புத்துணர்ச்சி பெறும்.
 
மேலும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் சீரகத் தண்ணீரைக் குடித்து வர வேண்டும்.

From around the web