மூங்கில் அரிசியின் நன்மைகள் இவைகள்தான்!!

மூங்கில் அரிசி  சாதாரண அரிசியைவிட செரிமான சக்தியினை மேம்படுத்துவதாக உள்ளது. மூங்கில் அரிசி அதிக அளவில் சக்தியினைக் கொண்டதாக உள்ளதால் விளையாட்டு வீரர்கள் மூங்கில் அரிசியினை எடுத்துக் கொள்கின்றனர்.

 
மூங்கில் அரிசியின் நன்மைகள் இவைகள்தான்!!

குழந்தைகளுக்கு மூங்கில் அரிசியால் செய்த உணவுப் பொருட்களைக் கொடுத்தால் அவர்கள் சுறுசுறுப்புடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பர்.

மேலும் மூங்கில் அரிசியில் சாதாரண அரிசியினைவிட புரதச் சத்து அதிக அளவில் இருப்பதால் முடி உதிர்தல், உடலின் வளர் சிதை மாற்றங்கள் போன்றவற்றில் மிகப் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தும்.

மேலும் மூங்கில் அரிசி கொழுப்பு என்பது கொஞ்சமும் இல்லாததால், முதியவர்களும், ஒபேசிட்டி பிரச்சினை இருப்பவர்களும் எடுத்துக் கொள்ளலாம். மேலும் உடல் எடையினைக் குறைக்க டயட் இருப்பவர்கள், மூங்கில் அரிசியினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

பொதுவாக நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்ப் பிரச்சினை உள்ளவர்கள் அரிசி சாதத்தினைத் தவிர்ப்பதுண்டு, ஆனால் சர்க்கரை நோயாளிகள் கொஞ்சமும் தயங்காமல் மூங்கில் அரிசியை எடுத்துக் கொள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

மேலும் மூங்கில் அரிசி முதியவர்களின் மூட்டுவலி, முதுகுவலிப் பிரச்சினைகளுக்குப் பெரும் தீர்வாக உள்ளது. 

மூங்கில் அரிசியினை கர்ப்பிணிப் பெண்கள், பிரசவித்த பெண்கள், மாதவிடாய் காலங்கள் என அனைத்துப் பெண்களும் எடுத்துக் கொண்டால் உடல் வலுபெற்று ஆற்றல் பெறுவர்.

From around the web