கோடை காலத்திற்கு ஏற்ற வெள்ளரிக்காய் ஜீஸ்!
 

கோடை காலத்தில் நாம் பொதுவாக குளிர்ச்சியான உணவுப் பொருட்களையே எடுத்துக் கொள்ளுதல் வேண்டும், இப்போது நாம் வெள்ளரிக்காயில் ஜீஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
கோடை காலத்திற்கு ஏற்ற வெள்ளரிக்காய் ஜீஸ்!

தேவையானவை :
வெள்ளரிக் காய் - 2
புதினா இலை- சிறிதளவு
உப்பு – 1 ஸ்பூன்
மிளகு  - 1 ஸ்பூன்
ஐஸ்கட்டிகள் – 3
மோர் – 1 டம்ளர்

செய்முறை :
1. வெள்ளரிக்காயின் தோலை நீக்கி மிக்சியில் போட்டு அத்துடன் மிளகு, உப்பு, புதினா சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து அரைத்த கலவையுடன் மோர் மற்றும் ஐஸ்கட்டிகள் சேர்த்துக் கலந்தால் வெள்ளரிக்காய் ஜூஸ் ரெடி.
 

From around the web