சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம் இந்த இட்லியை….

சுகர் பேஷண்டுன்னா சர்க்கரை சேர்க்காதே! வெல்லத்தை தொடாதேன்னு நூறு அட்வைஸ் வரும். ஆனா, இந்த கருப்பட்டி இட்லியை சுகர் பேஷண்டுகளும் பயப்படாம சாப்பிடலாம். சுகர் லெவல் ஏறாது. உடல் ஆரோக்கியத்துக்கும் மிக நல்லது. தேவையான பொருட்கள்.. இட்லி அரிசி – 8 கப்,உளுத்தம் பருப்பு – 1 கப்,உப்பு – தேவையான அளவு,சுத்தமான கருப்பட்டி – 2 கப்,சிறுபருப்பு – 1 கப்,நெய் – சிறிதளவு,தேய்காய்த் துருவல் – 1 கப். செய்முறை.. இட்லி அரிசியை 8
 

சுகர் பேஷண்டுன்னா சர்க்கரை சேர்க்காதே! வெல்லத்தை தொடாதேன்னு நூறு அட்வைஸ் வரும். ஆனா, இந்த கருப்பட்டி இட்லியை சுகர் பேஷண்டுகளும் பயப்படாம சாப்பிடலாம். சுகர் லெவல் ஏறாது. உடல் ஆரோக்கியத்துக்கும் மிக நல்லது.

சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம் இந்த இட்லியை….

தேவையான பொருட்கள்..

இட்லி அரிசி – 8 கப்,
உளுத்தம் பருப்பு – 1 கப்,
உப்பு – தேவையான அளவு,
சுத்தமான கருப்பட்டி – 2 கப்,
சிறுபருப்பு – 1 கப்,
நெய் – சிறிதளவு,
தேய்காய்த் துருவல் – 1 கப்.

செய்முறை..

இட்லி அரிசியை 8 மணி நேரம் ஊறவைக்கவும். உளுந்தை 2 மணி நேரம் ஊறவைக்கவும். இரண்டையும் தனித்தனியாக இட்லி மாவு பதத்துக்கு அரைக்கவும். சிறு பருப்பை சுத்தம் செய்து, சிவக்க வறுத்து வேக வைக்கவும் (பாதி வெந்தால் போதும்). இத்துடன் கரைத்து, பொடித்த கருப்பட்டியையும் தேங்காய்த் துருவலையும் சேர்த்து இறக்கி வைத்துக் கொள்ளவும், இட்லித் தட்டில் அரை கரண்டி இட்லி மாவு ஊற்றி, மத்தியில் கருப்பட்டிக் கலவையை பரப்பி, அதன்மேல் மேலும் அரைக் கரண்டி இட்லி மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும். இந்த இட்லி புதிய சுவையுடன் இருக்கும்.

From around the web