நிம்மதியான தூக்கம் வேணுமா?! அப்ப பஞ்சலோக பால் சாப்பிடுங்க.

தூக்கம் வராமல் தவிப்பவரா நீங்க?! அப்ப பஞ்சலோக பால் சாப்பிடுங்க.. அதென்ன பஞ்சலோக பால்?! பாலில், பனங்கற்கண்டு, மஞ்சள், சுக்குத்தூள், ஜாதிக்காய்பொடி, ஏலக்காய் பொடி, மிளகுத்தூள் சேர்ப்பதுதான் பஞ்சலோக பால்.. அதன் செய்முறையை பார்க்கலாமா?! தேவையான பொருட்கள்.. பால் – 250 மில்லி பனங்கற்கண்டு – ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள், சுக்குத்தூள், ஜாதிக்காய்ப் பொடி – தலா கால் டீஸ்பூன் ஏலக்காய் – ஒன்று மிளகுத்தூள் – 2 சிட்டிகை. செய்முறை: பாலை நன்றாக காய்ச்சி, அதில்
 
நிம்மதியான தூக்கம் வேணுமா?! அப்ப பஞ்சலோக பால்  சாப்பிடுங்க.

தூக்கம் வராமல் தவிப்பவரா நீங்க?! அப்ப பஞ்சலோக பால் சாப்பிடுங்க..

அதென்ன பஞ்சலோக பால்?! பாலில், பனங்கற்கண்டு, மஞ்சள், சுக்குத்தூள், ஜாதிக்காய்பொடி, ஏலக்காய் பொடி, மிளகுத்தூள் சேர்ப்பதுதான் பஞ்சலோக பால்.. அதன் செய்முறையை பார்க்கலாமா?!

தேவையான பொருட்கள்..

பால் – 250 மில்லி

பனங்கற்கண்டு – ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள்,

சுக்குத்தூள்,

ஜாதிக்காய்ப் பொடி – தலா கால் டீஸ்பூன்

ஏலக்காய் – ஒன்று

மிளகுத்தூள் – 2 சிட்டிகை.

செய்முறை:

பாலை நன்றாக காய்ச்சி, அதில் இடித்த ஏலக்காய், சுக்குத்தூள், ஜாதிக்காய்ப் பொடி, மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் வடிகட்டி அதில் பனங்கற்கண்டு சேர்த்து இளஞ்சூடாக பரிமாறலாம்.

நிம்மதியான தூக்கம் வேணுமா?! அப்ப பஞ்சலோக பால்  சாப்பிடுங்க.

பயன்:

இவ்வுலகைக் காக்கும் பஞ்சபூதங்கள்போல நம் உடலைக் காக்க பஞ்ச உலோகம் போன்ற திறன்மிக்க ஐந்து பொருள்கள் (மஞ்சள்தூள், சுக்குதூள், ஜாதிக்காய்ப் பொடி, ஏலக்காய், மிளகுத்தூள்) அடங்கியது பஞ்சலோக பால். இதை சாப்பிட்டால், ஜீரணக்கோளாறு உண்டாகாது, சளி, கபம் அண்டாது. ஜாதிக்காய் உடலை சுறுசுறுப்படைய வைக்கும். ஏலக்காய் வாய் துர்நாற்றத்தினை போக்கும். மொத்தத்தில் உடலினை திறம்பட செயல்படுத்தி நிம்மதியான உறக்கத்தினை கொடுக்கும்.

From around the web