பொன்னாங்கண்ணிக் கீரையின் மருத்துவ குணங்கள் இவைகள்தான்!!

பொன்னாங்கண்ணிக் கீரையானது ஒரு கட்டு ரூ.10 என்ற அளவில் விற்பனையாகி வருகின்றது. வெறும் 10 ரூபாய் மதிப்பு கொண்ட பொன்னாங்கண்ணிக் கீரையின் மருத்துவ குணங்கள் அளப்பரியது, அதன் மருத்துவ குணங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
 
பொன்னாங்கன்னி கீரையானது உடல் எடையைக் குறையச் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பதாய் உள்ளது, உடல் எடையினைக் குறைப்போர் அவர்களது டயட் பட்டியலில் நிச்சயம் பொன்னாங்கண்ணிக் கீரையினை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொன்னாங்கண்ணி கீரையானது பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சியினை வலுப்படுத்துவதாகவும் உள்ளது, ஈறுகளில் இரத்தம் கசிவது, வாய் துர்நாற்றம் போன்றவற்றினை சரிசெய்யும் தன்மை கொண்டுள்ளது.

பொன்னாங்கண்ணி கீரை மூலநோய் மற்றும் மண்ணீரல் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினைக் கொடுப்பதாக உள்ளது. 

மாலைக் கண் பிரச்சினை உள்ளவர்கள், கண் பார்வை மங்கல் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருதல் வேண்டும்.

மேலும் பொன்னாங்கண்ணி கீரை சருமத்தினை பளபளக்கச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது, அதாவது முக அழகினைக் கூட்ட நினைப்போர் பொன்னாங்கன்னி கீரையினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

From around the web