செம்பருத்திப் பூவின் மருத்துவ குணங்கள் இவைகள்தான்!!

செம்பருத்திப் பூ மிக எளிதாக கிராமப் புறங்களில் கிடைக்கும் பூ வகையாகும். இத்தகைய செம்பருத்திப் பூவின் மருத்துவ குணங்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

 
செம்பருத்திப் பூவின் மருத்துவ குணங்கள் இவைகள்தான்!!

செம்பருத்திப் பூவில் டீ செய்து குடிக்கலாம், ஹேர்பேக் மற்றும் ஹேர் ஆயில் தயார் செய்து பயன்படுத்தலாம். அதாவது செம்பருத்திப் பூவில் தயாரிக்கப்படும் டீயானது குடல்புண், வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப் புண் அனைத்தையும் சரிசெய்வதாக உள்ளது.

மேலும் கோடை காலங்களில் உடல் வெப்பத்தினைத் தணிக்க செம்பருத்திப் பூவால் செய்த டீயினை நாம் பருகி வருதல் வேண்டும். மேலும் இது சிறுநீர்ப் பெருக்கத்தைத் தூண்டுவதோடு சிறுநீர்க் கடுப்பு உள்ளிட்ட பிரச்சினைகளையும் சரிசெய்கின்றது.

மேலும் இது இரத்தத்தை சுத்தம் செய்வதோடு, மூச்சுப் பிரச்சினைகளையும் சரி செய்வதாக உள்ளது. மூலப் பிரச்சினை உள்ளவர்களுக்கு செம்பருத்தி டீ மிகச் சிறந்த தீர்வாக உள்ளது.

இரத்தக் கொதிப்பு பிரச்சினை உள்ளவர்கள், நாள்பட்ட தலைவலிப் பிரச்சினை உள்ளவர்கள் செம்பருத்திப் பூவினைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வது சிறந்தது.

செம்பருத்திப் பூவில் செய்யப்படும் ஹேர் ஆயில் மற்றும் ஹேர்பேக்கினை வாரத்தில் குறைந்தது இரண்டு முறை என்ற அளவில் பயன்படுத்தி வந்தால் உடல் சூடு குறையும். மேலும் இது தலைமுடி உதிர்வினை சரிசெய்வதாகவும் உள்ளது.

From around the web