கம்பின் மருத்துவ குணங்கள் தெரிஞ்சா அசந்துபோவீங்க!

கம்பு முந்தைய காலங்களில் அதிக அளவில் சமைத்து சாப்பிடப்படும் உணவு வகையாக இருந்துள்ளது. கம்பில் பொதுவாக கம்மஞ்சோறு, கம்மங்கூழ், கம்மங்களி, கம்பு லட்டு, கம்பு தோசை எனப் பல ரெசிப்பிகள் செய்யலாம்.

 
கம்பின் மருத்துவ குணங்கள் தெரிஞ்சா அசந்துபோவீங்க!

கம்பு உடல் சூட்டினைக் குறைப்பதாக இருப்பதால் கோடை காலங்களில் கம்பினை எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் வாந்தி, தலைசுற்றல், வயிற்றுக் கோளாறு, பசியின்மை பிரச்சினை உள்ளவர்கள் கொஞ்சமும் தயங்காமல் கம்மங்கூழினை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் வாய்ப் புண், குடல் புண், தொண்டைப் புண் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் கம்மஞ்சோறினை சாப்பிட்டு வந்தால் விரைவில் நலம் பெறுவர்.

மேலும் மூலம் உள்ளவர்கள் கம்மங்கூழினை வெங்காயத்துடன் வைத்து சாப்பிடுதல் வேண்டும்.
 
மேலும் முதியவர்கள் வயதான காலங்களில் ஏற்படும் அஜீரணப் பிரச்சினைகளைத் தவிர்க்கவும், புத்துணர்ச்சி பெற்று செயல்படவும் கம்மங்கூழினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
 
மேலும் இது  நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதாக உள்ளது. 


 

From around the web