சாப்பிட்டே உடல் எடையினைக் குறைக்கலாம் வாங்க!!
 

உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் பொதுவாக உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடாகவே இருக்கச் செய்வர். சில நாட்கள் மிகவும் கட்டுக்கோப்பாக சாப்பிட்டு வந்தவர்கள் அதன்பின்னர் வெறுத்துபோய் டயட்டினை முழுவதுமாக கைவிட்டுவிடுவர். இப்போது நாம் சாப்பிட்டுக் கொண்டே உடல் எடையினைக் குறைப்பது எப்படி என்று பார்க்கலாம்.

 
சாப்பிட்டே உடல் எடையினைக் குறைக்கலாம் வாங்க!!

அதாவது நாம் ஓட்ஸினை வாரத்தில் மூன்றுநாட்கள் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். மேலும் முட்டையினை நன்கு வேகவைத்து மிளகு மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து சாப்பிட்டு வரவும்.

மேலும் மீனை எண்ணெயில் முழுவதுமாக பொரித்து எடுக்காமல் தோசைக் கல்லில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.  மேலும் பன்னீரில் வறுவல் பொரியல் செய்து சாப்பிட்டு வரலாம்.

மேலும் கட்டாயம் மதிய நேரங்களில் தயிர் ஒரு கப் அளவில் எடுத்துக் கொள்வது நல்லது. இதன்மூலம் அதிக அளவில் உணவு எடுத்துக் கொள்வதை நாம் தடுக்கலாம்.

மேலும் சாப்பிட்டு முடித்தபின்னர் சீரகம் அல்லது சோம்பினை நீரில் ஊறவைத்துக் குடிக்கலாம் அல்லது சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்துக் குடிக்கலாம்.

அதேபோல் முந்திரி மற்றும் பாதாமை எண்ணெயில் பொரிக்காமல் சாப்பிடலாம். அதேபோல் சிக்கனிலோ அல்லது காய்கறியிலோ சூப் செய்து ஒரு நேர உணவாகக் கொள்ளலாம்.
 

From around the web