மீனில் உள்ள சத்துகள் குறித்துப் பார்க்கலாம் வாங்க!!

அசைவ உணவுகள் என்றால் ஆரோக்கியமற்றது என்ற எண்ணம் பலருக்கும் உண்டு, ஆனால் அசைவ உணவுகளிலும் மிகவும் அதிகமான சத்துகள் உள்ளது. அத்தகைய அசைவ உணவுகளில் ஒன்றான ஒன்றான மீன் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

அசைவ உணவுகள் என்றால் ஆரோக்கியமற்றது என்ற எண்ணம் பலருக்கும் உண்டு, ஆனால் அசைவ உணவுகளிலும் மிகவும் அதிகமான சத்துகள் உள்ளது. அத்தகைய அசைவ உணவுகளில் ஒன்றான ஒன்றான மீன் குறித்து இப்போது பார்க்கலாம்.

மீனில் அதிக அளவில் புரதமானது உள்ளது, மேலும் மற்ற அசைவ உணவுகளில் இருப்பதைப் போல் மீனில் கொழுப்புகள் இல்லாததால் இதனை அனைவரும் சாப்பிடலாம். மேலும் உடல் எடையினைக் குறைக்க விரும்புவோர் மற்ற அசைவ உணவுகளைத் தவிர்த்தாலும் மீனைத் தவிர்க்க வேண்டியதில்லை.

மீன் கண்பார்வையினை அதிகம் மேம்படுத்துவதால் கண் பார்வைத் திறன் குறைவாக இருப்போர்கள், மாலைக் கண் நோய் பிரச்சினை உள்ளவர்கள் மீனினைக் கட்டாயம் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

மேலும் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் மீனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்,  தைராய்டு பிரச்சினை வெகு விரைவில் குணமாகிவிடும். மேலும் மீன் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பெரும் தீர்வாக உள்ளது.

 மேலும் இரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் ஆட்டுக் கறியினை எடுத்துக் கொள்ளுதல் கூடாது என்று கூறுவதுண்டு, அதனால் இரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் மீனினை  எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் தலைமுடி கொட்டுதல் போன்ற பிரச்சினை கொண்டவர்கள் மீன் எண்ணெய் அல்லது மீன் முட்டையினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

From around the web