ஆரோக்கியம் நிறைந்த பாகற்காய் ஜூஸ்!
 

பாகற்காய் பொதுவாக கசப்புத் தன்மை கொண்டதாக உள்ளது, இத்தகைய பாகற்காயில் ஜூஸ் செய்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.

 
ஆரோக்கியம் நிறைந்த பாகற்காய் ஜூஸ்!

தேவையானவை:
பாகற்காய் – 1
மிளகு - 4
சீரகம் – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – ½ ஸ்பூன்

செய்முறை :
1. பாகற்காயை கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. அடுத்து மிக்சியில் பாகற்காய், மிளகு, சீரகம், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி கொண்டு வடிகட்டிக் கொள்ளவும்.
3. அதன்பின்னர் இத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கலந்தால் பாகற்காய் ஜூஸ் ரெடி.
 

From around the web