ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூ கூட்டு!

வாழைப் பூ அதிக அளவு நார்ச் சத்தினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இதனை உடல் எடையைக் குறைக்கும் ஒரு டயட் உணவாக எடுத்துக் கொள்ளலாம், இந்த வாழைப் பூவில் கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
 
வாழைப் பூ அதிக அளவு நார்ச் சத்தினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இதனை உடல் எடையைக் குறைக்கும் ஒரு டயட் உணவாக எடுத்துக் கொள்ளலாம், இந்த வாழைப் பூவில் கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
 வாழைப் பூ - 1
துவரம் பருப்பு - 1/2 கப்
சின்ன வெங்காய்ம் - 8
தக்காளி - 1
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
கடுகு- 1 ஸ்பூன், 
உளுந்து- 1 ஸ்பூன், 
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு- 1 ஸ்பூன்

செய்முறை:
 
1.    வாழைப்பூவை சுத்தம் செய்து நறுக்கி மோரில் போட்டு ஊறவைத்துக் கொள்ளவும். 
2.    அடுத்து பூண்டு, சீரகம், சோம்பு, தேங்காய்த் துருவலை சேர்த்து அரைத்துக்  கொள்ளவும்.
3.    அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து கருவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் பொடி, உப்பு  சேர்த்து வதக்கவும்.
4.    அடுத்து வாழைப்பூ, பருப்பு , அரைத்த தேங்காய், தண்ணீர் சேர்த்து  கொதிக்கவிட்டு இறக்கினால் வாழைப்பூ கூட்டு ரெடி.

From around the web