எல்லா உணவுக்கும் பொருந்தக்கூடிய அருமையான சைட் டிஷ் இதோ…

சப்பாத்திக்கு குருமா, இட்லிக்கு சாம்பார், தோசைக்கு சட்னி, சாதத்திற்கு சாம்பார், ரசம்.. என ஒவ்வொரு உணவுக்கும் சைட் டிஷ் தேடுவது என்பது இல்லத்தரசிகளின் பெரிய தலைவலி. ஆனா, இன்னிக்கு நாம பார்க்கப்போற டிஷ்சை சமைச்சு வச்சுட்டா எல்லாத்துக்குமே தொட்டுக்கலாம். எல்லா உணவுக்கும் பொருந்தக்கூடிய சைட் டிஷ் எதுன்னு பார்த்தால் அது இறால்தான்.. இறாலில் நிறைய புரத சத்து, கால்சியம், வைட்டமீன் டி இருக்கு, கொழுப்பு சத்து அறவே கிடையாது. இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண்
 
எல்லா உணவுக்கும் பொருந்தக்கூடிய அருமையான சைட் டிஷ் இதோ…

சப்பாத்திக்கு குருமா, இட்லிக்கு சாம்பார், தோசைக்கு சட்னி, சாதத்திற்கு சாம்பார், ரசம்.. என ஒவ்வொரு உணவுக்கும் சைட் டிஷ் தேடுவது என்பது இல்லத்தரசிகளின் பெரிய தலைவலி. ஆனா, இன்னிக்கு நாம பார்க்கப்போற டிஷ்சை சமைச்சு வச்சுட்டா எல்லாத்துக்குமே தொட்டுக்கலாம். எல்லா உணவுக்கும் பொருந்தக்கூடிய சைட் டிஷ் எதுன்னு பார்த்தால் அது இறால்தான்..

இறாலில் நிறைய புரத சத்து, கால்சியம், வைட்டமீன் டி இருக்கு, கொழுப்பு சத்து அறவே கிடையாது. இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முடி வளர்ச்சிக்கான கனிமங்கள் இதில் இருக்கு. கார்போ ஹைட்ரேட் துளிகூட கிடையாது. அதனால் எடை குறைக்க விரும்புறவங்க இந்த இறாலை அதிகளவு சாப்பிடலாம். இறாலில் செய்யப்பட்ட உணவுகள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் ஏற்றது

தேவையானவை: இறால் (சுத்தம் செய்து குடல் நீக்கியது) – 250 கிராம், பெரிய வெங்காயம் – 100 கிராம், தக்காளி – 100 கிராம், இஞ்சி-பூண்டு விழுது – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு

எல்லா உணவுக்கும் பொருந்தக்கூடிய அருமையான சைட் டிஷ் இதோ…

செய்முறை:

பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை தனித்தனியாக
பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், சோம்பு சேர்க்கவும். சோம்பு நன்றாக பொரிந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை நீங்கும்வரை வதக்கவும். கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின் தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மசாலாவை நன்கு வதக்கி, அதனுடன் சுத்தம் செய்த இறாலைச் சேர்த்துக் கிளறி வேகவிடவும். சிறிது நேரத்தில் இறால் வெந்ததும் கரம் மசாலாத்தூள் மற்றும் நறுக்கிய கொத்துமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கிளறிய பின் இறக்கவும்.

சாதத்துடன் சூடாக பறிமானால் அருமையா இருக்கும். பிரியாணி, ஃப்ரை, ஃப்ரைடு ரைஸ், சூப்  என  பலவிதமாக சமைத்து சாப்பிடலாம்.

From around the web