ஜாதிக்காய் தரும் பயன்கள்!

உடல் அழகுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஜாதிக்காய் ஆகும். ஜாதிக்காய் எதனோடு சேர்த்து பயன்படுத்தினால் எண்ணற்ற நன்மைகள் உண்டாகும் என்பதை விரிவாக பார்ப்போம். கண் கருவளையங்கள் மறைய: ஜாதிக்காயை பாலுடன் சேர்த்து சந்தன கல்லில் இழைத்து கண்களை சுற்றியுள்ள கருவளையங்கள் மேல் பூசவும். பதினைந்து நிமிடத்திற்கு பிறகு முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் செய்து வர, கண்களை சுற்றி இருக்கும் கருவளையங்கள் காணாமல் போகும். இதிலிருக்கும் பால் வறண்ட போன தோலை மென்மையாக்கும்,
 

உடல் அழகுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஜாதிக்காய் ஆகும். ஜாதிக்காய் எதனோடு சேர்த்து பயன்படுத்தினால் எண்ணற்ற நன்மைகள் உண்டாகும் என்பதை விரிவாக பார்ப்போம்.

ஜாதிக்காய் தரும் பயன்கள்!

கண் கருவளையங்கள் மறைய:

ஜாதிக்காயை பாலுடன் சேர்த்து சந்தன கல்லில் இழைத்து கண்களை சுற்றியுள்ள கருவளையங்கள் மேல் பூசவும். பதினைந்து நிமிடத்திற்கு பிறகு முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் செய்து வர, கண்களை சுற்றி இருக்கும் கருவளையங்கள் காணாமல் போகும். இதிலிருக்கும் பால் வறண்ட போன தோலை மென்மையாக்கும், கண்களை ஜாதிக்காய் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

அம்மைக் கொப்புளங்கள் மறைய:

சாப்பிடும் முன் ஜாதிக்காய், சீரகம் மற்றும் சுக்கு தூள் சேர்த்து சிறிதளவு சாப்பிட்டால், அம்மைக் கொப்புளங்கள் மறையும். ஜாதிக்காய் அதிகம் எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் அதன் வடு மறைவதற்கு ஜாதிக்காய், மஞ்சள் தூளுடன் பன்னீர் சேர்த்து தினமும் பூசி வந்தால் வடு காணாமல் போகும்.

பருக்கள் காணாமல் போக:

ஜாதிக்காய் பொடியை சந்தனப் பொடியுடன் சேர்த்து பூசினால் பருக்கள் மறையும். முகத்தில் சூடு கட்டிகள் பழுத்து உடைய, ஜாதிக்காய் பொடியுடன் பால் அல்லது பன்னீர் சேர்த்து பூசலாம். இதனை இரவில் போட்டுக்கொண்டும் உறங்கச் செல்லலாம். தொடர்ந்து செய்து வர, பருக்கள் மறைந்து, முக பொலிவு ஏற்படும்.

தூக்கம் வராமல் தவிப்போர்க்கு:

இரவு தூங்க போகும் முன் ஒரு சிட்டிகையளவு ஜாதிக்காய் தூளை பாலுடன்  சேர்த்து அருந்தினால் தூக்கம் நன்றாக வரும்.

From around the web