மஞ்சள் காமாலை அறிகுறிகள்!

மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. இரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகரிப்பதால், தான் மஞ்சள் காமாலையானது ஏற்படுகிறது. மஞ்சள் காமாலையானது மூன்று வகையாக உள்ளன. அவை கல்லீரலுக்கு முன், கல்லீரல் மற்றும் கல்லீரலுக்குப் பின் என்பன. இதில் கல்லீரலுக்கு முன் காமாலையானது, இரத்த சிவப்பணுக்கள் அதிகமாக உடைவதால் ஏற்படும். கல்லீரல் மஞ்சள் காமாலையில் பிலிரூபினின் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால், நுரையீரல் செயல்பாட்டை குறைத்து, கல்லீரலில் உள்ள செல்களை அழிக்கும். கல்லீரலுக்குப் பின் காமாலையில், பித்த நாளத்தில்
 

மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. இரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகரிப்பதால், தான் மஞ்சள் காமாலையானது ஏற்படுகிறது. மஞ்சள் காமாலையானது மூன்று வகையாக உள்ளன. அவை கல்லீரலுக்கு முன், கல்லீரல் மற்றும் கல்லீரலுக்குப் பின் என்பன.

மஞ்சள் காமாலை அறிகுறிகள்!

இதில் கல்லீரலுக்கு முன் காமாலையானது, இரத்த சிவப்பணுக்கள் அதிகமாக உடைவதால் ஏற்படும். கல்லீரல் மஞ்சள் காமாலையில் பிலிரூபினின் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால், நுரையீரல் செயல்பாட்டை குறைத்து, கல்லீரலில் உள்ள செல்களை அழிக்கும். கல்லீரலுக்குப் பின் காமாலையில், பித்த நாளத்தில் பித்த நீர் செல்வதில் ஏற்படும் தடையினால் உண்டாவது ஆகும்.

பொதுவாக மஞ்சள் காமாலையை கண்கள் மற்றும் சிறுநீர் வெளியேற்றத்தின் போது மஞ்சள் நிறத்தில் இருப்பதை வைத்து தான் கண்டறிவோம். ஆனால் இது மட்டும் மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் இல்லை. நமக்கு தெரியாத பல அறிகுறிகள் உள்ளன. அத்தகையவற்றை தெரிந்து கொண்டால், முன்கூட்டியே மஞ்சள் காமாலையை தடுத்துவிடலாம். இப்போது அத்தகைய அறிகுறிகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உஷார் ஆகிக் கொள்ளுங்கள்.

மஞ்சள் நிறத்தில் சருமம் மற்றும் கண்கள் காணப்பட்டால், அதுவும் மஞ்சள் காமாலைக்கான அறிகுறியாகும். ஆனால் இதனை பலர் சரியாக கவனிக்கமாட்டார்கள். ஏனென்றால் அனீமியா காரணமாகவும், சருமம் வெளிர் நிறத்தில் காணப்படும். ஆகவே கவனமாக இருக்கவும்.

வயிற்றின் வலது பக்கத்திற்கு சற்று கீழேயும் சில சமயங்களில் சற்று மேலேயும் கடுமையான வலி அடிக்கடி ஏற்படும். இத்தகைய வலி மஞ்சள் காமாலைக்கு மட்டும் ஏற்படாது, பித்தக்கற்கள் இருந்தாலும் ஏற்படும் என்பதால், அதிக கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

மஞ்சள் காமாலையின் அறிகுறிகளுள் பசியின்மையும் ஒன்று. இது பலருக்கு இருக்கும் சாதாரண பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பதால், பலர் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் இந்த அறிகுறியுடன், மஞ்சள் நிற சிறுநீர் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படுமாயின் அது மஞ்சள் காமாலை தான். இந்த உடல் அரிப்பு பித்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு, இரத்தத்தில் பிலிரூபினின் அளவை அதிகரித்து விடுவதால் ஏற்படும். ஆகவே திடீரென்று உடலில் அரிப்புக்கள் அதிகமாக இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

From around the web