விளக்கெண்ணெய் குடிச்சா உடல் எடை குறையுமா?
 

விளக்கெண்ணெய் பயன்படுத்தும் பழக்கம் பண்டைய காலங்களில் அதிக அளவில் இருந்தது, ஆனால் இன்றைய தலைமுறையினர் விளக்கெண்ணெயினை நிச்சயம் பயன்படுத்தி இருக்க வாய்ப்பில்லை. இப்போது நாம் விளக்கெண்ணெயின் நன்மைகள் குறித்துப் பார்க்கலாம் வாங்க.

 
விளக்கெண்ணெய் குடிச்சா உடல் எடை குறையுமா?

விளக்கெண்ணெயினை 6 மாதக் குழந்தையில் துவங்கி பல தரப்பட்ட வயதினருக்கும் கொடுப்பர், அதற்குக் காரணம் குழந்தைகள் மலச்சிக்கல் பிரச்சினை கொண்டிருந்தால் அதற்கு மிகச் சிறந்த தீர்வாக இதுவே இருக்கும்.

மேலும் விளக்கெண்ணெயினை ஒபேசிட்டி என்னும் உடல் எடைப் பிரச்சினை உள்ளவர்கள் குடித்துவந்தால் உடலின் வளர்ச்சிதை மாற்றம் மேம்பட்டு உடல் எடை குறையும்.

மேலும் உடல் சூடுப் பிரச்சினை கொண்டவர்கள் தலையின் உச்சியில் விளக்கெண்ணெயினைத் தேய்த்து வைத்து குளித்து வருதல் வேண்டும். மேலும் தலைமுடி கொட்டும் பிரச்சினை கொண்டவர்கள் விளக்கெண்ணெயினை சூடு செய்து, வெதுவெதுப்பான சூட்டில் தலைமுடியின் வேர்க்கால்களில் தேய்த்து வருதல் வேண்டும்.

மேலும் பிரசவித்த பெண்களுக்கு அடிவயிறு தொங்கியதுபோல் இருக்கும், விளக்கெண்ணெயினைக் கொண்டு அடிவயிற்றில் தேய்த்து வந்தால் மிக விரைவில் பழைய நிலைக்குத் திரும்புவீர்கள்.

மேலும் சருமத்தில் சுருக்கமோ அல்லது வறட்சியோ இருந்தால் விளக்கெண்ணெயினைக் கொண்டு மசாஜ் செய்தல் வேண்டும்.
 

From around the web