கறிவேப்பிலையின் நன்மைகள் தெரிஞ்சா நீங்க சாப்பிடாம இருக்க மாட்டீங்க!! 

ஒரு கட்டு கறிவேப்பிலையானது ரூபாய் 5 முதல் 10 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகும். கறிவேப்பிலையில் ஜூஸ், சட்னி, குழம்பு எனப் பல வகைகளில் எடுத்துக் கொள்ளலாம்.
 
 
கறிவேப்பிலையின் நன்மைகள் தெரிஞ்சா நீங்க சாப்பிடாம இருக்க மாட்டீங்க!!

கறிவேப்பிலையானது இரத்த சோகைப் பிரச்சினைக்கு மிகச் சிறந்த தீர்வாக உள்ளது. இதனால் இரத்த சோகைப் பிரச்சினை உள்ளவர்கள் மிக்சியில் பேரிச்சம் பழம் சேர்த்து தண்ணீர்விட்டு அரைத்துக் குடித்து வரவும்.

உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இரத்த ஓட்டமும் அதிகரிக்கும். இதனால் தலைமுடி வளர்ச்சியானது தூண்டப்படும்.
 
மேலும் சர்க்கரை நோய் பிரச்சினை உள்ளவர்கள் கறிவேப்பிலையினைப் பொடித்து மோரில் போட்டு குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

அதேபோல் கறிவேப்பிலைப் பொடியில் டீ செய்து தினமும் குடித்து வரும் பட்சத்தில் உடல் எடை குறையும், அதேபோல் கறிவேப்பிலையினை வெறும் வாயில் மென்று சாப்பிட்டு வந்தாலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.

அதேபோல் கர்ப்பிணிப் பெண்களும், பிரசவித்த பெண்களும் கறிவேப்பிலையினை மோருடன் சேர்த்துக் குடித்தால் உடல் பலம் பெறுவர். மேலும் கர்ப்ப காலத்தின் போதும், பிரசவத்திற்குப் பின்னரும் தலைமுடி உதிரும் பிரச்சினைக்கு தீர்வாக அமையும்.
 
மேலும் கறிவேப்பிலையானது பசியின்மையினை சரிசெய்வதோடு, செரிமான பிரச்சனைகள் சரிசெய்துவிடக் கூடியது.

From around the web