தேங்காய் எண்ணெயின் நன்மை தெரிஞ்சா பயன்படுத்தாம இருக்க மாட்டீங்க!
 

தேங்காய் எண்ணெய் பண்டைய காலங்களில் அழகி துவங்கி சமையல் வரை அனைத்திற்கும் உபயோக்கப்படுத்திய எண்ணெய் வகையாக இருந்து வருகின்றது. இத்தகைய தேங்காய் எண்ணெயின் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 
தேங்காய் எண்ணெயின் நன்மை தெரிஞ்சா பயன்படுத்தாம இருக்க மாட்டீங்க!

தேங்காய் எண்ணெய் கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த பொருட்களைக் காட்டிலும் மிகச் சிறந்த மாய்ஸரைசராகச் செயல்படுகின்றது. தேங்காய் எண்ணெயினை குளிர் காலங்களில் சருமத்திற்குப் பயன்படுத்தி வந்தால் சருமத்தில் ஏற்படும்  வறட்சியினைத் தவிர்க்க முடியும்.

மேலும் தோலில் சுருக்கங்கள் இருக்கும்பட்சத்தில் தேங்காய் எண்ணெயினைக் கொண்டு மசாஜ் செய்து வரவேண்டும்.

மேலும் தலைமுடி உதிர்தல் பிரச்சினை இருப்பவர்கள் தேங்காய் எண்ணெயினைச் சூடாக்கி தலைமுடியின் வேர்க் கால்களில் நன்கு மசாஜ் செய்தல் வேண்டும்.

அதேபோல் கால் எரிச்சல் பிரச்சினை இருந்தால் பாதத்தின் அடிப்புறத்தில் தேங்காய் எண்ணெயினைத் தேய்க்க வேண்டும், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், உடல் சூடு போன்ற பிரச்சினைகள் இருந்தால் தேங்காய் எண்ணெயினைத் தொப்புளில் தேய்த்து வர வேண்டும்.

தேங்காய் எண்ணெயினைக் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்துவந்தால் உடல் எடை குறையும்.
 
 

From around the web