தலைமுடி உதிர்வினைக் கட்டுக்குள் வைக்கும் சூப்பரான ஹேர்பேக்!!

தலைமுடி உதிர்வினைக் கட்டுக்குள் வைக்கும் பல வகையான ஹேர்பேக்குகளைப் பார்த்திருப்போம், அந்த வகையில் இப்போது ரொம்பவு சிம்பிளான பப்பாளி விதை ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தலைமுடி உதிர்வினைக் கட்டுக்குள் வைக்கும் பல வகையான ஹேர்பேக்குகளைப் பார்த்திருப்போம், அந்த வகையில் இப்போது ரொம்பவு சிம்பிளான பப்பாளி விதை ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

நெல்லிக்காய்- 3

பப்பாளி விதை- கைப்பிடியளவு

தேங்காய்ப் பால்- கால் கப்

செய்முறை:

1. பப்பாளி விதையினை வெயிலில் நன்கு காய விடவும், அதேபோல் நெல்லிக்காயினையும் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2. இவை இரண்டையும் வெயிலில் காய வைத்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.

3. அடுத்து இந்தப் பொடியினை தேங்காய்ப் பாலில் கலந்து ஊறவைத்துப் பயன்படுத்தவும்.

இந்த ஹேர்பேக்கினை தலைமுடியில் தேய்த்து 30 நிமிடங்கள் ஊறவிடவும், அதன்பின்னர் சீயக்காய் கொண்டு தலைமுடியை அலசினால் தலைமுடி உதிர்வானது கட்டுக்குள் வரும்.

From around the web