முகத்தினை பளிச்சிடச் செய்யும் பாசிப்பருப்பு ஃபேஸ்பேக்!!
 
முகத்தினை பளிச்சென்று மாற்றுவதில் பாசிப்பருப்பு முக்கிய பங்கு வகிக்கின்றது. இத்தகைய பாசிப்பருப்பில் இப்போது ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

முகத்தினை பளிச்சென்று மாற்றுவதில் பாசிப்பருப்பு முக்கிய பங்கு வகிக்கின்றது. இத்தகைய பாசிப்பருப்பில் இப்போது ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
பாசிப்பருப்பு- 3 ஸ்பூன்
தேங்காய்- 4 துண்டுகள் அளவு
எலுமிச்சை – 1 பழம்

செய்முறை:
1.    பாசிப்பருப்பினை வாணலியில் லேசாக வறுத்து ஆறவிட்டு மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து மிக்சியில் தேங்காயினைப் போட்டு தண்ணீர்விட்டு பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
3.    பொடித்த பாசிப்பருப்பு பொடியுடன், தேங்காய்ப் பால், எலுமிச்சை சாறு சேர்த்துக் கலந்தால் பாசிப்பருப்பு ஃபேஸ்பேக் ரெடி.
இந்த பாசிப்பருப்பு ஃபேஸ்பேக்கினை முகத்தில் தடவி, 30 நிமிடங்கள் ஊறவிட்டு அலசினால் முகம் பளிச்சிடும்.
 
From around the web