முகத்தினை பளிச்சென்று மாற்றும் இயற்கை ஃபேஸ்பேக்!!
 

முகத்தினை பளிச்சென்று மாற்றும் வகையிலான ஃபேஸ்பேக் ஒன்றினை நாம் எப்படித் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

 

தேவையானவை:
பீட்ரூட்- கால் துண்டு
கேரட்- அரை துண்டு
ஆப்பிள்- கால் துண்டு
பாலாடை- 2 ஸ்பூன்

செய்முறை:
1.    பீட்ரூட் மற்றும் ஆப்பிளின் தோலை நன்கு சீவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து மிக்சியில் பீட்ரூட், கேரட், பாலாடை மற்றும் ஆப்பிளைப் போட்டு அரைத்தால் ஃபேஸ்பேக் ரெடி.
இதனை முகத்தில் தேய்த்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு குளிர்ந்தநீரால் கழுவினால் முகம் பளிச்சென்று மாறும். 
 

From around the web