தலைமுடியை பட்டுப் போல் மின்னச் செய்யும் இயற்கையான கண்டிஷனர்!!
 

தலைமுடி பட்டுப்போல் இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காது, இப்போது நாம் எவ்வளவு வறட்சியான தலைமுடியினையும் பட்டுப்போல் மிளிரச் செய்யும் கண்டிஷனர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
தலைமுடியை பட்டுப் போல் மின்னச் செய்யும் இயற்கையான கண்டிஷனர்!!

தேவையானவை:
வெந்தயம்- 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- 4 ஸ்பூன்
மயோனைஸ்- 3 ஸ்பூன்

செய்முறை:
1.    வெந்தயத்தினை நீரில் போட்டு நன்கு ஊறவைத்து மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து  அரைத்த வெந்தயக் கலவையுடன் மயோனைஸ் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்தால் கண்டிஷனர் ரெடி.
இந்த கண்டிஷனரை தலைமுடியில் அப்ளை செய்து, 1 மணி நேரம் ஊறவிட்டு குளித்துவந்தால் தலைமுடி பட்டுப்போல் மின்னும்.
 

From around the web