கூந்தலை பட்டுப்போல் மென்மையாக்கும் ஹேர் பேக்!
 

கூந்தலை பட்டுப் போல் மென்மையாக்க நினைப்போர் வீட்டிலேயே இந்த ஹேர்பேக்கினைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் கூந்தல் மென்மையாகும்.

 
கூந்தலை பட்டுப்போல் மென்மையாக்கும் ஹேர் பேக்!

தேவையானவை:
கற்றாழை – 1 துண்டு
தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன், 
ரோஸ் வாட்டர்- 1 கப்

செய்முறை:
1.    கற்றாழைத் துண்டின் நுனியில் உள்ள முட்களை நீக்கி சதைப்பற்றினை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து அத்துடன் தேங்காய் எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து மைய அரைத்தால் ஹேர் பேக் ரெடி.
இந்த ஹேர்பேக்கினை தலைமுடிக்குத் தொடர்ந்து அப்ளை செய்துவந்தால் தலைமுடி உதிரும் பிரச்சினையானது சரியாகும்.
 

From around the web