செலவில்லாமல் தலைமுடிக்கு வீட்டிலேயே கலரிங்க் செய்யலாம் வாங்க!!

ஹேர்கலரிங்க் செய்ய 500 முதல் ஆயிரம் வரை குறைந்தபட்சம் செலவு ஆகும், ஆனால் இப்போது நாம் செலவே இல்லாமல் வீட்டிலேயே ஹேர் கலரிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

ஹேர்கலரிங்க் செய்ய 500 முதல் ஆயிரம் வரை குறைந்தபட்சம் செலவு ஆகும், ஆனால் இப்போது நாம் செலவே இல்லாமல் வீட்டிலேயே ஹேர் கலரிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையானவை:

பீட்ரூட்- 1

தயிர்- கால் கப்

மருதாணி இலை- கைப்பிடியளவு

செய்முறை:

  1. மருதாணி இலைகளை வெயிலில் 4 மணி நேரம் காயவைத்து மென்மையாக பொடித்துக் கொள்ளவும்.
  2. அடுத்து பீட்ரூட்டினை தோல்நீக்கி மிக்சியில் போட்டு தயிர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  3. இந்தக் கலவையுடன் மருதாணியைக் கலந்து முடியில் பயன்படுத்தவும்.

இந்தக் கலவையினை தலைமுடியில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டுக் கழுவினால் தலைமுடி சூப்பராக கலர் மாறி இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.

From around the web