மணப்பெண்ணுக்கான பாசிப்பயறு ஃபேஸ்பேக்!!

பாசிப் பயறில் கால்சியம், புரதம், நார்ச்சத்துகள், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் உள்ளன. இந்த பாசிப் பயறில் சருமத்தை மினுமினுவென்று மிளிரச் செய்யும் ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பாசிப் பயறில் கால்சியம், புரதம், நார்ச்சத்துகள், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் உள்ளன. இந்த பாசிப் பயறில் சருமத்தை மினுமினுவென்று மிளிரச் செய்யும் ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

பாசிப்பயறு - 10 கிராம்

தேங்காய்ப் பால்- ¼ கப்

ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன்

செய்முறை:

  1. பாசிப்பயறினை வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  2. அடுத்து அதனை மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
  3. அந்த பாசிப் பயறு மாவுடன், தேங்காய்ப் பால் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து 20 நிமிடங்கள் ஊறவைத்துப் பயன்படுத்தவும்.

இந்த ஃபேஸ்பேக்கினை சருமம் முழுவதும் அப்ளை செய்து, நன்கு மசாஜ் செய்தால் முகம் பொலிவு பெறும், இதனை வாரத்தில் 3 முறை செய்து வர வேண்டும்.

From around the web