தகதகன்னு தங்கம்போல உங்கள் உடல் ஜொலிக்கனுமா?!

66e796684517deb5cba75bb8882ad04d

முகப்பொலிவிற்காக தொலைக்காட்சி முதற்கொண்டு நாளிதழ்கள் வரை விதவிதமான முகப்பூச்சுகளை தினத்துக்கொன்றாக விளம்பரப்படுத்திக்கொண்டே இருக்கின்றது. வெள்ளை நிறத்திற்கு ஆசைப்பட்டு பெண்களும், அவற்றை வாங்கி பூசிக்கொள்கின்றனர். விளைவு, சரும அலர்ஜி, முகப்பரு..

fca63a9ebaa7bd9a6d96892fefca9c7c

இப்படி கண்டதையும் வாங்கி பூசி பணத்தையும் ஆரோக்கியத்தையும் இழப்பதற்கு தீர்வுதான் நம் முன்னோர்கள் பயன்படுத்திய நலங்கு மாவு. க் நலங்கு மாவினை தொடர்ந்து உபயோகித்து வரும்போது முகப்பரு குறைவதுடன் நாளடைவில் மறைந்து மீண்டும் தோன்றாமல் போகும். நலங்கு மாவினை கையிடுக்குகளில் பயன்படுத்துவதால் வியர்வை துர்நாற்றத்தை போக்கும். இந்த நலங்கு மாவினை தேய்த்து குளிப்பதால் எந்தவித பக்கவிளைவுகளும் இருக்காது. அதனால், பிறந்த குழந்தை முதல் அனைவரும் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு இந்த மாவினை தேய்த்து குளிக்க வைப்பதால் குழந்தைகள்மீது வரும் கொச்சை வாசனை நீங்கி நாள் முழுவதும் நல்ல வாசனையோடு திகழ்வர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பயன்படும் நலங்குமாவினை வீட்டில் இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

1b03003e9331901dc65574194f73e7fb

தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு – 50 கிராம்
பாசிப் பருப்பு – 50 கிராம்
வசம்பு – 50 கிராம்
ரோஜா மொக்கு – 50 கிராம்
சீயக்காய் – 50 கிராம்
அரப்புத் தூள் – 50 கிராம்
வெட்டி வேர் – 50 கிராம்
விலாமிச்சை வேர் – 50 கிராம்
நன்னாரி வேர் – 50 கிராம்
கோரைக் கிழங்கு – 50 கிராம்
பூலாங்கிழங்கு – 50 கிராம்
கஸ்தூரி மஞ்சள் – 50 கிராம்
மஞ்சள் – 50 கிராம்
ஆவாரம்பூ – 50 கிராம்
வெந்தயம் – 50 கிராம்
பூவந்திக்கொட்டை – 50 கிராம்

1e5c045f7d74c6b38273a3248e12c399

செய்முறை
கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, வசம்பு, ரோஜா மொக்கு, சீயக்காய், அரப்புத் தூள், வெட்டி வேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், கோரைக் கிழங்கு, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள் , ஆவாரம்பூ, வெந்தயம், பூவந்திக்கொட்டை ஆகியவற்றை நன்கு சூடு ஏற வெயில் உலர்த்தவும்.
பின் மிசினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். பின் ஆற வைத்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவையான அளவு எடுத்து உபயோகிக்கவும்.

குறிப்பு
ஆண்கள் பயன்படுத்தும்போது மஞ்சள் சேர்க்காமல் மற்ற பொருட்களைக் கொண்டு தயாரித்துக் கொள்ளலாம். 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...