முகத்தினை பளபளன்னு மாற்றும் கொத்தமல்லி இழை ஃபேஸ்பேக்!!
முகத்தினை பளபளன்னு மாற்றுவதில் கொத்தமல்லிக்கு முக்கிய பங்கு உண்டு. இத்தகைய கொத்தமல்லி இழையினைக் கொண்டு ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
Fri, 19 Feb 2021

முகத்தினை பளபளன்னு மாற்றுவதில் கொத்தமல்லிக்கு முக்கிய பங்கு உண்டு. இத்தகைய கொத்தமல்லி இழையினைக் கொண்டு ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
கொத்தமல்லி இழை - கைப்பிடியளவு
தயிர்- கால் கப்
ஆப்பிள் வினிகர்- 3 ஸ்பூன்
செய்முறை:
1. கொத்தமல்லி இழைகளை ஆய்ந்து தண்ணீர்விட்டு அலசிக் கொள்ளவும்.
2. அடுத்து கொத்தமல்லி இழையினை மிக்சியில் போட்டு தயிர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
3. இதனுடன் ஆப்பிள் வினிகர் சேர்த்தால் கொத்தமல்லி இழை ஃபேஸ்பேக் ரெடி.
இந்த கொத்தமல்லி இழை ஃபேஸ்பேக்கினை முகத்தில் தடவி, ஊறவிட்டு குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் பளபளவென்று மாறும்.